
331,709 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தயார்
இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு பரீட்சார்த்திகளுக்குத் தேவையான சகல வசதிகளும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2,200 மையங்களில் பரீட்சைகள் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, பரீட்சை நிலையங்களைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.