21 ஐ ஆதரிக்க மகிந்த நிபந்தனை
நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் வகையிலான திருத்தங்களை கொண்டு வந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டம் அமையுமானால், அதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிப்பதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும், அதிகாரம் இல்லாத பிரதமரை நியமிப்பதை எதிர்க்கும் அதேவேளை நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் திருத்தத்தை ஆதரிப்பதில் தனக்கு பிரச்சினையில்லை எனவும் பிரதமர் தெரிவித்தாக சாகர காரியவசம் குறிப்பிட்டார்.