
கொழும்பில் ஆடைகளை உலரவிடுவதற்காக சென்ற 16 வயது சிறுமியை காணவில்லை!
16 வயது தங்களது மகளைக் காணவில்லை என கொழும்பின் புறநகராகிய கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த மாணவி ஆடைகளை உலரவிடுவதற்காக நேற்று பிற்பகல் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை என சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி மாயமான சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.