11 வர்ண ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கை 52 இடங்களில் முன்னெடுப்பு!
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்ற வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கமைய 11 வர்ண ஸ்டிக்கர் மூலம் வகைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
கொழும்பிற்குள் நுழையும் 52 இடங்களில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளுக்காக பிரவேசிப்போருக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக காவல்துறையால் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 11 வர்ண ஸ்டிக்கர்கள் பின்வரும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தரப்பினரின் வாகனங்களில் ஒட்டப்படுகின்றன.
அதற்கமைய,
சுகாதாரத்துறை (பச்சை நிறம்)
பாதுகாப்புப் பிரிவு மற்றும் பாதுகாப்பு துறை (நீல நிறம்)
அத்தியாவசிய பொருள் விநியோகம் (சிவப்பு நிறம்)
அத்தியாவசிய சேவை வழங்குநர் (மஞ்சள் நிறம்)
அரசதுறை (இளஞ்சிப்பு நிறம்)
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவைகள் (கபில நிறம்)
உணவு விநியோகம் சார்ந்த விடயங்கள் (சாம்பல் நிறம்)
தனியார் துறை வங்கி / நிதியியல் சேவைகள் (ஊதா நிறம்)
வைத்தியசாலை மற்றும் மரணம் சார்ந்த விடயங்கள் (கறுப்பு )
ஊடகம் மற்றும் தொடர்பாடல் சம்பந்தப்பட்ட விடயங்கள் (செம்மஞ்சள் நிறம்)
வெளிநாட்டு பயணங்கள் (வெள்ளை)
என 11 நிறங்களிலான ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றன.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.