100000 பேருக்கான வேலை வாய்ப்பில் வட கிழக்கு முற்றாக புறக்கணிப்பு?
நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்குக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்ற அரசின் தீர்மானத்தை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று மாலை அவசர உத்தரவாகத் திடீரென வெளியிட்டுள்ளது.
க.பொ.த. சாதாரணம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அறிவித்த அரசு தற்போது வடக்கு, கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிட்ட அதேநேரம், ஏனைய ஏழு மாகாணங்களிலும் அதனை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு,கிழக்கின் 8 மாவட்டங்களிலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கும்,
பிரதேச செயலாளர்களுக்கும் நேற்று மாலை தொலை நகல் மற்றும் மின்அஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இந்தத் திட்டத்தில் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குரிய ஒதுக்கீடான சுமார் இருபதாயிரம் பேருக்கான வேலை வாய்ப்பும் நிரந்தரமாக முடக்கப்பட்டு – மறுக்கப்பட்டு – ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டு, ஒரு லட்சம் வேலை வாய்ப்பும் ஏழுமாகாணங்களுடன் அடங்கி விடுமா என்ற ஐயம் எழுப்பப்படுகின்றது.
“வருமானம் குறைந்த ஒரு லட்சம் பேருக்கான நியமனம் வழங்கும் விடயத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பலநோக்கு அபிவிருத்திக்கான செயலணி
தற்சமயத்துக்கு கவனத்தில் கொள்வதில்லை என்பதை அறியத் தருகிறோம்’ என உள்நாட்டலுவல்கள் அமைச்சு நேற்று மாலை அனுப்பிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபயராஜபக்ச வெற்றியீட்டியமையை அடுத்து வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த க.பொ.த. சாதாரண தரம் வரை கற்ற ஒரு லட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டம் அறிவிக்கப் பட்டது.
அதன்படி இலங்கை முழுவதிலும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகப் பரீட்சைகளும் நடத்தப்பட்டு ஆள்கள்தெரிவுசெய்யப்பட்டனர். வடக்கு, கிழக்கி
லும் சுமார் இருபதாயிரம் பேர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில் -நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்நியமனங்கள் வழங்கப்படும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்து இந்த நியமனங்கள் வழங்கும் நடவடிக்கை எந்நேரத்திலும் மீளஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் மேற்குறித்த தகவலின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தமுடியவில்லை.
இதுவரையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் 131 பேர் வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரையில் 2760 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போதுவரை 11 இறப்புகள் கொரோனா காரணமாக பதிவாகியுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.