1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்
பெரும்பாலும் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை குழுக்களில் பணி செய்து வந்த ஊழியர்கள் தான் அதிகம் என்று கூறப்படுகிறது. உலகின் பெரும் நிறுவனங்கள் தனது ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது. இது பல தனியார் ஊழியர்களிடத்தும் பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
மெட்டா, கூகுள், மைக்ரோ சொஃப்ட் போன்ற பெரு நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த வாரத்தில் மேலும் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது.
இதில் பெரும்பாலும் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை குழுக்களில் பணி செய்து வந்த ஊழியர்கள் தான் அதிகம் என்று கூறப்படுகிறது.
இது வரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்த ஆதாரங்களை பார்க்கையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
கடந்த வாரம் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.