இலங்கையில் அல்பா கொவிட் திரிபுடன் 10 பேர் அடையாளம்!
இலங்கையில் அல்பா கொவிட் திரிபுடன் 10 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் பத்து நாட்களில் தெமட்டகொட – அராமய பகுதியில் உள்ள மக்களுக்கு பீ.சீ.ஆர் அல்லது ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த பகுதியில் அண்மையில் ஐந்து பேர் டெல்டா கொரோனா திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுவரை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41,914 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.