ஆப்கனில் கொட்டிக் கிடக்கும் 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள கனிம புதையல்!
தாலிபன்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ள ஆப்கானிஸ்தானில் ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள கனிம வளங்கள் புதைந்து கிடப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
தாலிபன்கள் ஆட்சியை பிடித்த பிறகு ஆப்கனுக்கு வழங்கும் உதவிகளை பல நாடுகள் நிறுத்திக் கொண்டதால் தாலிபன்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களால் இந்த கனிம புதையலை வெட்டி எடுப்பது அத்தனை எளிதானதல்ல என்று கூறப்படுகிறது. கனிம வளங்களை கண்டுபிடித்து அவற்றை முறையாக வெட்டி எடுக்கத் துவங்க குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும் என்பதால், அரசியல் நிலைத்தன்மை இல்லாத ஆப்கனில் அது சாத்திமில்லை என்றும் கூறப்படுகிறது.
விலை மதிப்பு அதிகம் உள்ள காப்பர், பாக்சைட், இரும்பு தாது, லித்தியம் மற்றும் அரிய தனிமங்கள் ஆப்கனில் நிறைந்துள்ளது. காப்பர் மின் தளவாட உற்பத்திக்கும், லித்தியம் கார் பேட்டரிகளுக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளன. இன்னும் 20 ஆண்டுகளில் லித்தியத்தின் தேவை 40 மடங்கு அதிகரிக்கும் என்பதால் அதில் இருந்து கிடைக்கும் வருமானமும் பிரம்மாண்டமாக இருக்கும்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.