
யாழில் இடம்பெற்ற மோதலில் 07 பேர் படுகாயம்
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று(30) இரவு இடம்பெற்ற மோதலில் 07 பேர் படுகாயமடைந்துள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கிய சந்தேக நபர்கள், ஒரு மகிழுந்து மற்றும் முச்சக்கர வண்டி என்பனவற்றையும் தாக்கிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
5 உந்துருளிகளில் வந்து, தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் 14 பேரை, கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.