அட்றா சக்கை! வெறும் 8 நிமிடங்களில் 0 – 100% சார்ஜிங்-ஆ! எந்த Phone-ல?
ஒரு 4000mAh பேட்டரி திறன் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை 0 முதல் 100 சதவீதம் வரை வெறும் 8 நிமிடங்களில் நிரப்ப முடியும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா… நம்பித்தான் ஆக வேண்டும்.
ஹைலைட்ஸ்:
- 200W ஹைப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிவித்த சியோமி
- 8 நிமிடங்களில் 1005 சார்ஜ் செய்யும்
- உடன் 120W வயர்லெஸ் சார்ஜிங்கும் அறிவிப்பு.
கடந்த சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் சார்ஜிங் வேகத்தில் சில விதிவிலக்கான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
ஒருகாலத்தில் 10W அல்லது 18W சார்ஜிங் ஆதரவு மிகவுமே வேகமானதாக கருதப்பட்டது. ஆனால் இன்று நம்மிடம் Xiaomi Mi 11 Ultra மற்றும் iQOO 7 போன்ற ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
அவைகள் 120W பாஸ்ட் சார்ஜிங்கை எட்டியுள்ளன. இதுவே பெரிய அளவிலான வேகம் என்று நம்மில் பலர் நினைத்தாலும், பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இதோடு முடிந்து போவதாய்த் தெரியவில்லை.
ஏனெனில் இன்று, சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் சார்ஜிங் வேகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது – மி 11 ப்ரோவின் கஸ்டம் உருவாக்கத்திலான 200W வயர்டு மற்றும் 120W வயர்லெஸ் சார்ஜிங் சொல்யூஷன் கொண்ட ஹைப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்தைக் காண்பிப்பதன் மூலம்!
ட்விட்டரில் ஒரு புதிய போஸ்ட் வழியாக, சியாமி அதன் ஹைப்பர்சார்ஜ் என்கிற புதிய சார்ஜிங் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தியுள்ளது. இது 200W கவயர்டு சார்ஜிங் மற்றும் 120W வயர்லெஸ் சார்ஜிங்கை வழங்குகிறது.
சியோமி இந்த புதிய தொழில்நுட்பத்தை Mi 11 Pro ஸ்மார்ட்போனின் தனிப்பயன் உருவாக்கத்துடன் நிரூபித்துள்ளது. 200W கம்பி சார்ஜிங் மி 11 ப்ரோவின் 4,000 எம்ஏஎச் பேட்டரியை வெறும் 8 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்கிறது. இது ஸ்மார்ட்போன் சார்ஜிங் வேகத்திற்கான புதிய உலக சாதனையை உருவாக்கும்.
மறுகையில் உள்ள 120W வயர்லெஸ் சார்ஜிங்கும் ஒரு புதிய சாதனையை அமைக்கிறது, இது Mi 11 Pro ஸ்மார்ட்போனின் காலியான பேட்டரியை வெறும் 15 நிமிடங்களில் நிரப்புகிறது.
10 நிமிடங்களுக்குள் 0-100 முதல் கட்டணம் வசூலிக்கப்படுவது பயனர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இருப்பினும், இது பேட்டரியின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
ஸ்மார்ட்போனை இவ்வளவு அதிக வாட்டேஜில் சார்ஜ் செய்யும் போது, அது பேட்டரி ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாக்க திட்டமிட்டுள்ளது என்பது குறித்து சியோமி எதுவும் சொல்லவில்லை.
விரைவில், ஹைபர்சார்ஜ் தொழில்நுட்பத்தில் ஆழமான முன்னேற்றங்கள் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும், இந்த சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் அதன் புதிய ஹைப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்தை உண்மையில் அதன் எந்த ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்யும் என்பது குறித்த தகவல்கள் இல்லை.
இந்த தொழில்நுட்பத்தை அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களில் கொண்டு வர சியோமி திட்டமிட்டிருந்தாலும், அதிக வாட்டேஜ் சார்ஜிங்கில் எழும் பல சிக்கல்களை அது தீர்க்க வேண்டியிருக்கும் என்பதால், சியோமி இதை செய்ய நிறைய நேரம் எடுக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.