
விளையாட்டு தனமாக கர்ப்பமான சிறுமி! சிறுவன் கைது!
ஆனைமலை பகுதியை சேர்ந்த சிறுமி (15). பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த மாணவி கடந்த மாதம் 25 தேதி முதல் காணவில்லை. அவரதின் பெற்றோர்கள் அக்கம் பக்கம் என அனைத்து இடங்களிலும் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் ஆனைமலை போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விாரணை நடத்தினார்கள். மேலும் சிறுமியை வலை வீசி தேடி வந்தனர். அப்போது அந்த சிறுமி 17 வயது சிறுவனை காதலித்து வந்தது தெரியவந்தது.இந்நிலையில் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தனர். அப்போது அந்த சிறுவனுடன் சிறுமி இருபது தெரிய வந்தது.
உடனடியாக அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதனையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததும் தற்பொழுது அந்த சிறுமி கர்பமாக இருப்பதும் தெரியவந்தது .இதயடுத்து போலீசார் போக்சோ வழக்காக மாற்றி அந்த சிறுவனை கைது செய்தனர்.