வாழ்க்கை ஜெயிக்கணுமா? அப்போ இந்த விஷயங்களுக்கு எப்பவும் வெட்கபடாதீங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், சில விஷயங்கள் செய்வதற்கு வெட்கப்படுபவர்கள் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பில்லை என சாணக்கியர் கூறுகிறார். அப்படியான விஷயங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. வாழ்க்கையில் ஒருவர் சாப்பிடுவதற்கு எந்த சமயத்திலும் வெட்கப்பட கூடாது என சாணக்கியர் கூறுகிறார். சிலர் வெட்கப்பட்டுக் கொண்டு சாப்பிடாமல் இருப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். உறவினர் வீடுகளுக்கு செல்லும் போது வெட்கத்தில் சிலர் கொஞ்சமாக சாப்பிடுவார்கள். ஆனால் அவர்களின் வயிற்றில் பசி இருக்கும். எப்போதும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்.
2. ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பணத்துடன் தொடர்புடைய விடயங்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சிலர் பணத்தை கொடுத்து விட்டு திருப்பி கேட்க வெட்கம் கொள்வார்கள். இப்படி இருந்தால் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற முடியாது.
3. உங்களுக்கு தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் இருந்து வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். ஆசிரியரிடம் கற்க வெட்கப்படும் ஒரு நபர் அல்லது மாணவர் வாழ்நாள் முழுவதும் அறியாதவராகவே இருந்து விடுவார். அறிவை வாழ்நாள் முழுவதும் வளர்த்து கொண்டே இருக்க வேண்டும்.
4. ஒரு வேலையில் இறங்கி விட்டால் என்ன பிரச்சினை வந்தாலும் பின் வாங்கக் கூடாது. மாறாக தோல்வியைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினால் வெற்றி அடைவது கஷ்டமாகி விடும். எப்போதும் அரைகுறை மனதுடன் பணிகளைச் செய்யக்கூடாது என சாணக்கியர் கூறுகிறார்.