வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால் உடல் நல பாதிப்பு?
வாரத்திற்கு 55 மணி நேரங்களுக்கு அதிகமாக வேலை செய்தால் மிகவும் மோசமான உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இப்படி அதிக வேலை செய்பவர்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் இன்னும் மோசமான விளைவுகளுக்கு ஆளாக நேரிடும் என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மரியா நெய்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ல் மட்டும் அதிக வேலைப்பளுவால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு 7 லட்சத்து 45 ஆயிரம் பேர் இறந்து விட்டதாக உலக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இது 2000 ஆம் ஆண்டை விட 30 சதவிகிதம் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.