வானிலை தொடர்பான அறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் மேல் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது 40-45 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.
அதேநேரம் இன்று மதியம் 12:10 மணிக்கு நாவக்காடு (புத்தளம் மாவட்டம்), கல்கமுவ (குருநாகல் மாவட்டம்), ஒனேகம (பொலன்னறுவை மாவட்டம்) ஆகிய இடங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.