வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதில் புதிய மாற்றம்
மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தவிர வேறு எந்த மாகாணத்தின் வாகனங்களுக்கும் தென் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அல்லது தென் மாகாணத்திலுள்ள எந்தவொரு பிராந்திய செயலகத்திலோ வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டமானது, நேற்றைய தினத்திலிருந்து (03) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தென் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணத்தின் வருமான அனுமதிப்பத்திரத்தை பெறும்போது உரிமக் கட்டணத்திற்கு மேலதிகமாக 100 ரூபா கட்டணமாக அறவிடப்படும் என தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையானது இதுவரை அந்தந்த மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்ததது.
இந்த நிலையில், மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தவிர வேறு எந்த மாகாணத்தின் வாகனங்களுக்கும் தென் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அல்லது தென் மாகாணத்திலுள்ள எந்தவொரு பிராந்திய செயலகத்திலோ வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.