வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னரே அந்த எரிபொருள் நிலையங்களுக்கு எரிபோருள் விநியோகம் செய்யப்படும்
வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னரே அந்த எரிபொருள் நிலையங்களுக்கு எரிபோருள் விநியோகம் செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தனது கீச்சகப் பதிவில் தெரிவித்துள்ளதாவது;
விநியோகம் தொடங்கும் வரை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின்(சிபெட்கோ) எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என்று பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னரே அந்த எரிபொருள் நிலையங்களுக்கு எரிபோருள் விநியோகம் செய்யப்படும்.
இணையவழி ஊடாக பதியப்பட்ட தேசிய எரிபொருள் பாஸ் (QR குறியீடு) மற்றும் வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரண்டும் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் திகதி அறிவிக்கப்படும்.
கணினியை அமைப்பதும் செயல்படுத்துவதும் எளிதான காரியம் அல்ல. ஆனால், அடுத்த சில மாதங்களில் அனைவருக்கும் வாராந்திர எரிபொருள் ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இது செயல்படுத்தப்பட வேண்டும்.
இதை சுமூகமாக செயல்படுத்த பொதுமக்கள் ஆதரவு தேவை மற்றும் தேவைக்கேற்ப விநியோகம் மேம்படுத்தப்படும் – என்றுள்ளது.