லிட்ரோ எரிவாயு விலை குறைகிறது
உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, நவம்பர் முதல் வாரத்திற்குள் சமையல் எரிவாயுவின் விலை மேலும் குறையும் வாய்ப்பு இருப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையிலும் சந்தை நிலைமைக்கு ஏற்ப லிட்ரோ கேஸ் விலை குறைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பெற்ற கடன்களுக்காக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் 7.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு மீளச் செலுத்தியுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்