
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் (02-08-2023) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதான லாபீர் றைசூஸ் சமன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் கல்வியங்காட்டில் அவர் நேற்று உபகரணங்களை விற்பனை செய்துகொண்டிருந்தவேளை மயங்கி விழுந்துள்ளார்.
இதன்போது அவருடன் சேர்ந்து வியாபாரத்தில் இளைஞன் அவரை விடுதிக்கு அழைத்துச் சென்றார்