
யாழ்ப்பாணத்தில் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்
சிறுப்பிட்டி நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களது பிள்ளை படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 5 மணியளவில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.
8 வயதுச் சிறுவன் கால் முறிந்த நிலையில் 48 வயதுடைய தந்தையும் 42 வயதுடைய தாயும் படுகாயமடைந்துள்ளனர்.
கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த மூவரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தை நேரில் கண்டவர் வாதிட்ட நிலையில் கார் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.