
யாழ்ப்பாணத்தில் மாணவியை தாக்கிய ஆசிரியர்
வலிகாம வலயப் பிரிவில் இணுவிலில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி மீது பாடசாலை ஆண் ஆசிரியர் பிரம்பினால் தாக்கியது உண்மை என குறித்த பாடசாலையின் அதிபர் விளக்கம் அளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவி ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கதற்காக இருந்த நிலையில் ஒரு நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழலை ஏற்பட்டது.
இதன் காரணமாக கோபம் அடைந்த ஆசிரியர் மாணவியின் காலில் தழும்புகள் ஏற்படும் வகையில் மூன்று தடவைகள் பிரம்பினால் தாக்கியுள்ளார்.
குறித்த விடையம் சிறுவர் நன்னடத்தை உத்தியோத்தருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிசார் குறித்த ஆசிரியரையும் மாணவியின் உறவினர்களையும் பொலிஸ் நிலையம் வரவழைத்தனர்.
ஆசிரியர் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட நிலையில் பாடசாலையின் நலன் கருதி குறித்த சம்பவத்தை சமரசமாக பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக் கொண்டனர்.
மாணவிக்கு காலில் தழும்புகள் ஏற்பட்டதை தவிர வேறு எந்த உடல் உளப் பாதிப்புகளும் ஏற்படாத நிலையில் குறித்த மாணவி தனது அன்றாட கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என அவர் மேலும் தெரிவித்தார்.