
யாழ்ப்பாணத்தில் பெண் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில், மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில், மஞ்ஞத்தடி பகுதியில் கணவர் இறந்த நிலையில் 62 வயதான வயோதிப பெண் ஒருவர் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பெண்ணின் சகோதரர் மதிய உணவை வழங்குவதற்காக வீட்டிற்கு சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.