யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் தனிமையில் இருந்த சமயம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்திய பின்னர் வீட்டின் பிரதான கதவினை சேதப்படுத்திவிட்டு அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்தை சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த போது நகைகளும் கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரு குடும்பத்துக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே அந்த பெண்ணின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என சந்தேகிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.