யாழ்ப்பாணத்தில் உள்ள நிரப்பு நிலையமொன்றில் வரிசைகளில் காத்திருக்காது எரிபொருள் நிரப்ப கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் எவை?
👉 அதிகார வர்க்கத்தினராக / அவர்களது அல்லக்கைகளாக இருத்தல்.
👉 பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்களாக / நண்பர்களாக குறைந்த பட்சம் அல்லக்கைகளாக இருத்தல்.
👉 இராணுவத்தினரது உறவினர்களாக / நண்பர்களாக குறைந்த பட்சம் அல்லக்கைகளாக இருத்தல்.
👉 யாழ் மாவட்ட செயலகத்தின் / குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தராக, உத்தியோகத்தர்களின் உறவினர்களாக, நண்பர்களாக குறைந்த பட்சம் வேண்டப்பட்டவர்களாக இருத்தல்.
👉 எரிபொருள் நிரப்பு நிலையத்தை சேர்ந்தவர்களின் உறவினர்களாக / நண்பர்களாக, கறுப்பு சந்தை முகவர்களாக குறைந்த பட்சம் அல்லக்கைகளாக இருத்தல்.
💢 மேலே உள்ள முதற்கட்ட தகுதிகள் எவையும் இல்லாதவர்களுக்கான இரண்டாம் கட்ட தகுதிகள் பின்வருமாறு.
⚡ வரிசையில் நிற்கின்ற மனிதாபிமானம் அற்ற, தன் பின்னால் வரிசையில் நிற்பவர்களின் வலிகள், வேதனைகள், துன்பங்களை உணராத ஒருவன்/ ஒருத்தியின் உறவினர்களாக / நண்பர்களாக குறைந்த பட்சம் வேண்டப்பட்டவர்களாக இருத்தல்.
⚡ வரிசையில் நிற்கின்ற, தன்னை ஒரு கேவலமான காவாலியாக வெளிப்படுத்தும் ஒருவனின் உறவினர்களாக / நண்பர்களாக குறைந்த பட்சம் அல்லக்கைகளாக இருத்தல்.
⚡ பெண்கள் ஆயின் இரண்டு வயதிற்கு குறைந்த ஒரு குழந்தையுடன் வரிசைகளுக்கு வருதல். (சொந்த குழந்தையாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை.) உந்துருளி பிரயாணத்தில் பிள்ளைகளை காவிச்செல்ல பயன்படுத்தும் பையில் இட்டு முன்புறமாக தொங்கவிட்டு வருதல் சிறப்பு. 🤱
⚡ ஏதாவது ஒரு மதகுருவாக இருத்தல். ஆலயங்களில் பூசை செய்ய வேண்டியது அவசியம் இல்லை. நடை, உடை, பாவனையில் மதகுருவாக வெளிப்படுதல் போதுமானது.
⚡ முழுமையாக வெண்ணிற ஆடையில் வரும் சுகாதார உத்தியோகத்தர்களாக இருத்தல். 🏥
🛑 பிரதானமான விடயம் என்னவென்றால், இந்த அநீதிகளையும் அநியாயங்களையும் பார்த்துக்கொண்டு இருக்கும் மற்றவர்கள் எல்லோரும் கையாலாகாதவர்களோ / பயந்தாங்கொள்ளிகளோ / ஏமாளிகளோ அல்ல. தமது அத்தியாவசியம் கருதி ஏதோ அனைத்தையும் சகித்துக்கொண்டு அமைதியாக நின்று கிடைக்கின்ற அற்ப சொற்ப எரிபொருளையாவது பெற்றுச்செல்வோம் என எண்ணுபவர்களே அதிகம். ஆனாலும் இந்த பொறுமை எல்லோருக்கும் எப்போதும் அப்படியே இருக்காது. ஏனெனில் பொறுமையை விட “மனிதம்” உயர்வானது.
நியாயத்திற்காக ஒன்றினைகின்றவர்களின் சக்தி அளப்பரியது. இதைத்தான் கடந்த மே 9இல் முழு இலங்கையுமே பார்த்தது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத அதிகார வர்க்கமாக இருந்தாலும் சரி அனைத்து வித துர்நடத்தைகளும் கொண்ட உள்ளூர் அல்லக்கை கூட்டங்களானாலும் சரி காலம் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்காது என்பதை உணரவேண்டி ஏற்படும்.