யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணத்தில் பாண் வாங்கிய ஒருவர் பாணுக்குள் கண்ணாடிப் துண்டை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று (21.05.2024) வாங்கிய பாணிலேயே கண்ணாடி துண்டு காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.