fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தாய்லாந்து செல்கிறார்

சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை தாய்லாந்து செல்லவுள்ளார்

கோத்தபாய ராஜபக்ச தென்னாசிய நாட்டில் தற்காலிக பாதுகாப்பை  பெறமுயல்கின்றார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து அவர் இலங்கையிலிருந்து தப்பிவெளியேறியிருந்தார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி வியாழக்கிழமை சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு  தாய்லாந்து செல்லவுள்ளார் என தங்களை இனம்காட்ட விரும்பாத இரு தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன இலங்கை வெளிவிவகார அமைச்சை தொடர்புகொள்ளமுடியவில்லை தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது

இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் பொது இடங்களில் கோத்தபாய ராஜபக்சதோன்றவில்லை கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை,அவருக்கு  எந்த வித விசேட சலுகையையும் வழங்கவில்லை என சிங்கப்பூர் கடந்த வாரம் தெரிவித்திருந்தது

செல்வாக்கு மிகுந்த குடும்பத்தை சேர்ந்த 73 வயது கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றினார் பின்னர் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.

2009 இல் அவரின் காலத்தில் இலங்கை படையினர் தமிழ் கிளர்ச்சியாளர்களை இறுதியாக தோற்கடித்து இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்தனர்.

சில மனித உரிமை அமைப்புகள் தற்போது கோத்தபாய ராஜபக்சவை யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.ராஜபக்ச இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை அவரும் அவரது குடும்பத்தவர்களும் பொருளாதாரத்தை  மோசமாக கையாண்டனர் என சில விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்தார்.இளைய சகோதரர் இந்த வருடம் நிதியமைச்சராக பணியாற்றினார்ஃ

ராஜபக்சவிற்கு பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில்விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்ச தற்போதைக்கு நாட்டிற்கு திரும்பி வருவதை தவிர்க்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இது அவர் நாட்டிற்கு திரும்புவதற்கான தருணம் என நான் கருதவில்லை என சர்வதேச ஊடகத்திற்கு அவர் தெரிவித்திருந்தார்.

Back to top button