
முதல் கட்டமாக 12,000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க ஏற்பாடு
தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12,000 பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான போட்டி பரீட்சை அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
அத்துடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தல், விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.