மின்சார கட்டண சீரமைப்பு : உச்சநீதிமன்றத்தின் திருத்தங்களை ஏற்றது அரசு
மின்சார கட்டணம் தொடர்பில் உச்சநீதிமன்றம் சமர்ப்பித்த அனைத்து திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
நேற்று (04) அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இதன்படி, மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை அல்ல என்றும், அந்த சரத்துக்கள் நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு சரத்தும் பொது வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்தை முன்வைத்த சபாநாயகர், உரிய சரத்துக்களை திருத்தினால் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றார்.