மாலைத்தீவில் தனியார் ஜெட் விமானத்திற்காக காத்திருக்கும் கோட்டாபய!
மாலைத்தீவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அந்நாட்டு அரசாங்கத்திடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று அதிகாலை மாலைத்தீவை சென்றடைந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றிரவு (13-07-2022) மாலைத்தீவில் இருந்து SQ437 விமானம் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 23.35 மணிக்கு சிங்கப்பூர் செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவு அரசிடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.