
மற்றுமொரு லிட்றோ எரிவாயு கப்பல் வருகை
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்ட மற்றுமொரு கப்பல் நேற்று (12) இலங்கையை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எரிவாயுவின் தரம் தொடர்பான பரிசோதனை பணிகள் நிறைவடைந்தவுடன் உடனடியாக இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் மேலும் பல எரிவாயு கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.