
மற்றுமொரு தேரரின் மோசமான செயல் அம்பலம் – 8 வயது சிறுமி பாதிப்பு
காலியில் 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 76 வயதுடைய விஹாராதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
யக்கஹா வலஹந்துவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் விஹாராதிபதியாக செயற்பட்ட 76 வயதான தேரர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான விஹாராதிபதி, சிறுமியை விகாரைக்கு அருகில் உள்ள வீட்டின் அறைக்குள் அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதை அவதானித்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதற்கமைய, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததுடன் சிறுமியை கராபிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அங்கு சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதனை தடயவியல் மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்த நிலையில் விஹாராதிபதியை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.