
மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்பு: விடுக்கப்பட்டுள்ள அவசர பணிப்புரை
வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக சுமார் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
மழையினால் மரக்கறிகள் பயிரிடப்பட்ட பல காணிகள் அழிவடைந்துள்ளதாக அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அனைத்து பயிர் சேதங்கள் தொடர்பிலும் உடனடியாக அறிக்கை வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்திக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதிகளவான மரக்கறி பயிரிடப்பட்ட நிலங்கள் அழிவடைவதால் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்புள்ளதால் தோட்டக்கலை திட்டங்களை ஆரம்பிக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களங்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.