மன அழுத்தத்தில் இருக்கும் போது இதை செய்றீங்களா? ஆபத்து நிச்சயம்
மன நலம் தொடர்பான பிரச்சனைகள், சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. மன அழுத்தம் என்பது இப்போது பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.
இந்த ஒரு மன பாதிப்பினால், நம் வாழ்வில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம் ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் என்பது ஒவ்வொரு வகையாக இருக்கலாம்.
இப்படி மன அழுத்தத்தினால பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்ச்சியாக செய்யும் சில தவறினால், அந்த நிலையில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றது. அந்த வகையில் மன அழுத்தத்தில் இருந்தால் என்ன செய்ய கூடாது என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
1. மன அழுத்தத்தில் இருக்கும் சமயத்தில் மட்டுமல்ல, எப்போதுமே போதை பொருட்களை உபயோகிக்க கூடாது.
மது அருந்துவதில் இருந்து சிகரெட் பிடிப்பதில் இருந்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு போதை இருக்கிறது. எனவே, இவற்றில் மாட்டாமல் மனதை சரிசெய்வதற்கான வழிகளை பார்க்க வேண்டும்.
2. உங்களுக்கு மன அழுத்தம் அல்லது மன சோர்வு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், கண்டிப்பாக தனியாக இருப்பதை தவிர்க்கவும்.
மனம் சாந்தமடையாமல் இருக்கும் போது அதை அமைதிப்படுத்த கண்டிப்பாக நம்மை விட இன்னொருவர் நமக்கு தேவைப்படுவர். எனவே, இது போன்ற சமயங்களில் தனியாக இருப்பதை தவிர்க்கவும்.
நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை சந்தித்து பேசவும். அறையை விட்டு வெளியே சென்று இயற்கையை கண்கூடாக பார்க்கவும்.
3. பசியே இல்லை என்றால் கூட அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருப்பர். இது, அவர்களின் உடலையும் உடல் நலனையும் மோசமாக சீர்க்குலைக்கும்.
இதனால் மனம் தொடர்பான பிரச்சனைகளும் வரலாம். தூக்கமின்மை, வாயு பிரச்சனை, உடல் பருமன் பிரச்சனைகள் அதிகமாக சாப்பிடுவது மூலமாக வரும். எனவே, அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.