fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

மனைவி விவாகரத்து., Apple நிறுவனத்திடம் ரூ.200 கோடி இழப்பீடு கேட்கும் தொழிலதிபர்

மனைவி விவாகரத்து கோரியதால், Apple நிறுவனத்தின் மீது கோபம் கொண்ட தொழிலதிபர் ஒருவர் கிட்டத்தட்ட ரூ. 200 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Delete செய்யப்பட்ட செய்திகளைப் பார்த்து மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததால், அவர் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் மீது 5 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை பிணமதிப்பில் சுமார் ரூ.195 கோடி) கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த அந்த தொழிலதிபர், தனது iPhone-ல் உள்ள iMessage செயலியில் இருந்து பாலியல் தொழிலாளர்களுடன் Chat செய்துள்ளார்.

அதனை தன் மனைவி கண்டு கொள்ளாதபடி அவற்றை நீக்குவதில் கவனமாக இருந்துள்ளார்.ஆனால், அவரது மொபைல் ID குடும்பம் பயன்படுத்தும் iMac-உடன் இணைக்கப்பட்டதை அவர் மறந்துவிட்டார்.

தொலைபேசியில் அரட்டை செய்திகள் நீக்கப்பட்டாலும், அவை iMac-இல் இருக்கும். ஒரு நாள் அவருடைய மனைவி அவற்றை பார்த்துவிட்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்

இதன் விளைவாக, தொழிலதிபர் ஆப்பிள் மீது வழக்கு தொடர்ந்தார்.

விவாகரத்து வழங்கப்பட்டால், அவளுக்கு சுமார் 5 மில்லியன் பவுண்ட்ஸ் செலுத்த வேண்டும், எனவே அதனை தருமாறு நீதிமன்றத்தை அணுகினார்.

போனில் மெசேஜ்கள் டெலிட் செய்யப்பட்டால், ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது, ஆப்பிள் கூட இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது அவரது வாதம். 

அந்த மனுவில், அந்த செய்திகளை நீக்கும் போது, ​​அந்த சாதனத்தில் மட்டும் டெலிட் செய்யப்பட்டதாக செய்தி வந்தால், பயனர்கள் உஷார்படுத்தப்படுவார்கள் என்றும், இதில் ஆப்பிள் நிறுவனம் தவறிவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.  

Back to top button