பெட்ரோலின் விலை இன்று குறைப்பு?
உள்நாட்டில் எரிபொருள் விலை இன்று திருத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு எடுத்த கொள்கை முடிவின்படி, எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் நாட்டில் எரிபொருள் விலைகள் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15ஆம் திகதிகளில் மாற்றியமைக்கப்படும்.
எவ்வாறாயினும், கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் நடைமுறைக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைக்கப்பட்ட போதிலும், கடந்த நான்கு முறை உள்நாட்டில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
உலக பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் உயரும் என்ற அச்சம் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட உலக சந்தையில் எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் நேற்று ஒரு பீப்பாய் 87.96 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் யுஎஸ் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா 79.49 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டது.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாடுகள் நீக்கியதால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக சந்தையில் எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தாலும், கடந்த சில வாரங்களாக விலைகள் சீராக குறைந்துள்ளன.
இதற்கிடையில், உள்நாட்டு முன்னணியில், சர்வதேச நிலமை காரணமாக எரிபொருள் விலைகள் கணிசமான அளவு குறையும் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் இலங்கையில் எரிபொருளின் விலையை சுமார் 125 ரூபாயினால் குறைக்க முடியும் என எதிர்க் கட்சியுடன் இணைந்துள்ள தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.