புலம்பெயர் தொழிலாளர்களுக்காக புதிய விசா திட்டத்தை அறிவித்துள்ள நாடு
நியூசிலாந்து அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய தற்காலிக விசா திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி,சில பருவ கால தொழிலாளர்களுக்கே இந்த புதிய தற்காலிக விசா வாய்ப்பை நியூசிலாந்து அறிவித்துள்ளது.
இந்த விசா திட்டம் பருவத்தின் உச்சநிலைகளை சந்திக்கும் துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, Specific Purpose Work Visa எனும் புதிய துணைப்பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அரசு இந்த புதிய துணைப்பிரிவை ஆகஸ்ட் 15ஆம் திகதி அன்று அறிவித்துள்ளது.
தொழில்கள் இந்த விசா, பருவம் மாறும் போது நேரடியாக பாதிக்கப்படும் அறுவடை, பனிச்சறுக்கல் கற்றல், அல்லது மரம் நடுதல் தொழில்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொழிலானது 2025 ஆம் ஆண்டு மே 31ஆம் திகதிக்குள் தொடங்கப்பட வேண்டும் என்றும் 9 மாதங்கள் அல்லது அதற்குள் முடிவடைய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய விசாவிற்குத் தகுதிப் பெற, தொழிலாளர்கள் அனுப்பப்படும் தொழில்கள் குறைந்தபட்சம் 30 மணி நேரம் வாரத்திற்கு மற்றும் ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்சம் NZD 29.66 (சுமார் இலங்கை ரூ.5,540) சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
மேலும், தொழிலில் முன் அனுபவம் 4 மாதங்கள் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
அத்துடன், இந்த விசா மாற்றம் காலவரையற்றதாக அமையாது என்பதுடன் ஒரு தற்காலிக நடைமுறையாகும்.
இந்நிலையில், தற்போதுள்ள Accredited Employer Work Visa (AEWV) விசாவைப் பயன்படுத்தி நீண்டகால விசா மாற்றத்தை ஆய்வு செய்யும் பணியில், அரசு தொடர்ச்சியாக ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளது.