
புத்தளம்- மாதம்பே தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ பரவல்
புத்தளம்- மாதம்பே வடக்கு முகுனுவடவன பிரதேசத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ பரவலினால் பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ பரவலானது நேற்று (23.05.2024) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மின்கசிவு காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேம் வெளியிட்டுள்ளனர்.
இதன் போது குறித்த தொழிற்சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான தென்னை நார்கள் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் சிலவற்றை எந்தவித சேதமுமின்றி மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தீ பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் சிலாபம் மாநகரசபையின் தீயணைப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.