
புதிதாக பதவியேற்கவுள்ள 12 அமைச்சர்கள்
புதிதாக பன்னிரண்டு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர்களில் 10 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்பட உள்ளனர்.
அதன்படி நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, ஜனக பண்டார தென்னக்கோன், எஸ்.பி.திஸாநாயக்க, விமலவீர திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்மொழிந்துள்ளது.
ஏனைய கட்சிகளில் இருந்து ஜீவன் தொண்டமான் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது 18 கபினட் அமைச்சர்களே அமைச்சரவையில் உள்ளனர்.