புகையிலை பாவணையால் புற்றுநோய் வருமா? மருத்துவம் சொல்லும் தகவல்
பொதுவாக வாய், தொண்டை, நுரையீரல் பகுதிகளில் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணம் புகையிலை பழக்கம் என கூறப்படுகின்றது.
இது ஒரு மூலிகைச் செடி என்பதால் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்பட்ட நிலையில் காலப்போக்கில் போதைக்காக பயன்படுத்தும் போல் மாறியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட புகையிலை மூச்சிரைப்பு, மலேரியா, உணவுக்குழாய் அழற்சி, மூலநோய், மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டன.
மேலும் சருமத்தில் ஏற்படும் வெட்டுக்காயங்கள், சிரங்கு, மற்றும் ஏனைய தோல் நோய்களில் மேற்பூச்சாக பயன்படுத்தினார்கள்.
இவ்வளவு நல்ல குணங்கள் கொண்ட புகையிலையால் எப்படி புற்றுநோய் வருகின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கடந்த 18-ம் நூற்றாண்டு காலப்பகுதி முதல் புகையிலையானது சுருட்டாகவும், சிகரெட்டாகவும் மாற்றப்பட்டது.
இது போன்ற வடிவங்களில் இருக்கும் புகையிலையை புகைக்கும் பொழுது அதில் உள்ள நிகோடின், பைரிடின், கார்பன் மோனாக்சைடு உடலுக்குள் செல்லும். இதனால் கொடூரமான பாதிப்புகள் ஏற்பட துவங்கின.புகையிலையை பதப்படுத்தி சிகரெட்டாக மாற்றிய பின்னர் அதுனுடன் சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்கள் இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதிலும் குறிப்பாக உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படவும் காரணமாக இருக்கிறது. மாறாக புகைக்கும் பொழுது புகைப்பவர்களை விட அவர் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
மூளையில் இருக்கும் “டோபோமைன்” என்ற சுரப்பி உற்சாகத்தை தூண்டக் கூடியது. இந்த சுரப்பியை தூண்டும் வேலையை புகையிலை செய்கிறது. இதற்கு அடிமையாகி தான் இன்றும் பலர் சிகரெட் பாவணையில் இருக்கிறார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.