
பாடசாலைகளுக்கு தொடர் விடுமுறை!
ஜூலை 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற்கு கொண்டு இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாகவும், குறித்த விடுமுறைக்கு பதிலாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னராக விடுமுறை நாட்களில் பாடசாலைகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.