பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் அதிகாரம் மாகாண சபைக்கு
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பிலான வர்த்தமானியை வெளியிடப்படவுள்ளது.மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்ப்பார்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி ,எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு இது தொடர்பான பிரேரணையை பரிந்துரைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பிலான வர்த்தமானியை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர்,
“அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஓய்வுபெற்ற மற்றும் சேவையிலிருந்து வெளியேறியவர்களுக்குப் பதிலாக பட்டதாரிகள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரம் உள்ளது.
இதேவேளை, விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் தொடர்புடைய 5,450 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 750 ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பில் மத்திய மாகாண கல்வி அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ” என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.