fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பகிடிவதைக்கு எதிரான நடவடிக்கை கடுமையாக்கப்படும். என கூறப்பட்டுள்ளது.

இதனை உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் “பகிடிவதை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட மாணவர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்” எனவும் கூறியுள்ளார்.

இதன்படி, குற்றம் நிரூபிக்கப்படும் மாணவர்களை வகுப்புகளில் இருந்து தடை செய்யவும், பட்டங்களை இரத்து செய்யவும், உள்ளூர் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அரச துறையில் பணியாற்ற முடியாத வகையில் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வழக்கறிஞர்களின் உதவியைப் பெறுவோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பகிடிவதை செய்வது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும், அதில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதைய சட்டங்களே போதுமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் இவ்வாறான நிகழ்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக தரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடகங்களுக்கு பல்கலைக்கழகங்கள் திறந்திருக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button