பல்கலைக்கழக அனுமதியில் புதிய நடைமுறை
2021 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக அனுப்ப வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் இன்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒன்லைன் முறையின் மூலம் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை உரிய முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும்.”என கூறியுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி மேலும் 2021 ஆம் அண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, 42,519 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களில் 2,035 மாணவர்கள் மருத்துவ பீடங்களுக்கும், 2,238 மாணவர்கள் பொறியியல் பீடங்களுக்கும் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்