fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான சிவரூபனுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று (09-02-2023) விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையிலேயே இவர் விடுதலையாக உள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றிருந்த நிலையில் அவர் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற நடைமுறைகளுக்கு அமைய இன்று காலை 9.00 மணிக்கு அவர் விடுதலையாவார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Back to top button