பதவி விலகினார் நாமல் ராஜபக்ச!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதற்கமைய வெற்றிடமாக உள்ள குழு பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.நாமல் ராஜபக்ச, இதுவரை காலமும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக செயற்பட்டுள்ளார்.