
பணியாற்றும் நிறுவனத்தில் கடும் அழுத்தம் – உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்
மொனராகலையில் பணியிடத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
தனமல்வில பகுதியைச் சேர்ந்த மிஹிரன் சதுரங்க என்பவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
பணியிலிருந்து விலக பல தடவைகள் விண்ணப்பித்தும் நிர்வாகம் அனுமதிக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழப்பதற்கு முன்னர் அவர் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
தனது அம்மா சுகயீனமாக இருப்பதாகவும் அவரை பார்த்துக் கொள்வதற்கு நேரம் கேட்டு பல முறை அலுவலகத்திற்கு இந்த இளைஞன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். எனினும் நிறுவனம் அதனை கண்டுக் கொள்ளவில்லை.
காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்வதற்கு முயற்சிப்பதாகவும் மின்சாரம் தடைப்பட்ட நேரங்களில் உட்பட பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு நேரம் வழங்குமாறும் கோரியுள்ளார். எனினும் அவரது மின்னஞசல்களுக்கு நிறுவனம் சார்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இறுதியில் பணி அழுதத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த இளைஞனின் மரணத்திற்கு காரணமாக அந்த நிறுவனத்தின் மீது பலரும் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றர்.