நீரிழிவு நோயாளிகளின் சிறந்த காலை உணவு என்னனு தெரியுமா?
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அனைத்து வயதினருக்கும் இந்நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
குறித்த நோய் மரபணு ரீதியாக இருந்தாலும், மோசமான வாழ்க்கை முறையின் காரணமாகவே அதிகரித்து வருகின்றது.
கணையத்தில் இன்சுலின் இயக்கம் குறையும் போது, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இந்த நோய் வருகிறது.
மேலும், இந்த பிரச்சனையால், கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உறுப்புகள் பலவீனமடை தொடங்குகின்றன. சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுபவர்கள் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும்.
இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் காலை நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளின் பட்டியலை இங்கு தெரிந்து கொள்வோம்.
காலை நேரத்தில் சர்க்கரை நோயாளிகள் புரதங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பயறு மற்றும் சுண்டல் இவற்றில் புரதங்கள் அதிகமாக இருப்பதாால் கட்டாயம் எடுத்துக் கொள்ளவும். வேக வைத்த கொண்டைக்கடலையை ஒரு கப் எடுத்துக் கொண்டு அதனுடன் நறுக்கிய வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை இவற்றினை சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம்.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் ஓட்ஸ் தான் பெரும்பாலான நபர்களின் காலை உணவாக இருக்கின்றது. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் இதனை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி இவற்றினை சேர்த்து மசாலா ஓட்ஸாக சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவான ஓட்ஸை, நீரிழிவு நோயாளிகளும் எடுத்துக்கொள்ளலாம். இதில் சில காய்கறிகள் சேர்த்து ஓட்ஸ் இட்லியாக செய்து சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த காலை உணவுகளில் ஒன்று தான் ராகி ஊத்தப்பம். இதிலும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதுடன், நீங்கள் விரும்பிய காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சிறந்த பலன் கிடைக்கும்.
அதிகளவு புரோட்டீன் உள்ள தானியங்களில் ஒன்று பச்சை பயறு. பச்சை பயறு தோசையை காலை நேரத்தில் நீரிழிவு நோயாளிகள் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
காலை உணவாக நீரிழிவு நோயாளிகள் முட்டையை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதனை அவித்தோ, அல்லது கொஞ்சம் நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், துருவிய கேரட் சேர்த்து ஆம்லேட்டாக சாப்பிட்டால் அதிக நன்மை கிடைக்கும்.