
நாளை விசேட விடுமுறை
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இன்றைய தினம் அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாளைய தினம் வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கபட்டுள்ள திங்கட்கிழமை கொழும்பு பங்கு பரிவத்தணை நடவடிக்கைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஊடகபேச்சாளர் அவிஸ்க்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.