
நான்கு மாதமே ஆன குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து யாழ்ப்பாணத்தில் துணிகர கொள்ளை
நான்கு மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து 25 இலட்சம் ரூபா பெறுமதியான நகை, பணம் என்பவற்றை துணிகரமாக கொள்ளையடித்து சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.
இந்த துணிகர திருட்டுச் சம்பவம் யாழ்ப்பாணம் மாசியப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கணவன்,மனைவி மற்றும் இரண்டு சிறுபிள்ளைகள் இருந்த வீட்டிற்குள் நேற்று அதிகாலை உட்புகுந்த திருடர்கள் பிறந்து நான்கு மாதமே ஆன குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி இந்த துணிகர கொள்ளையை நடத்தியுள்ளனர்.இதன்போது 11 பவுண் நகை,மூன்று கைபேசிகள், இரண்டு இலட்சம் ரூபா பணம்,மற்றும் மோட்டார் சைக்கிள் என 25 இலட்சம் ரூபா பெறுமதியில் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த கொள்ளைச் சம்பவத்தில் நால்வர் ஈடுபட்டதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.