நாட்டில் கொரோனோ மரணங்கள் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று (25) மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இருவரும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆணொருவரும் பெண்ணொருவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 664,975ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.