நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது தாக்குதல் — சுமந்திரன்கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கு எதிராக பொலிஸ்மா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேணடும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது பொலிஸாரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர் தாக்குதலை மேற்கொண்டவர்களை இலகுவாக அடையாளம் காணமுடியும் என தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்